ETV Bharat / sitara

இன்ஸ்டாவில் இணைந்த கரீனாவை வரவேற்ற பிரபலங்கள்: சில நிமிடங்களில் திக்குமுக்கடாவைத்த ரசிகர்கள்!

author img

By

Published : Mar 7, 2020, 1:02 PM IST

Kareena
Kareena

கரீனா கபூரின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெள்ளிக்கிழமை இணைந்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் கரீனா கபூர். சமெலி (chameli), தேவ் (Dev), ஓம்கரா (omkara) எனப் பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 19 ஆண்டுகளுக்கு மேல் திரைத் துறையில் வெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்துவருகிறார். பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் - ராணி முகர்ஜி ஆகியோர் 'டா ரா ரம் பும், ஹம் தும்' படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவரும் நட்பாகப் பழகி திருமணம் செய்துகொண்டனர்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் கரீனா கபூர் தற்போது இணைந்துள்ளார். இவரைக் கரீனாவின் சகோதரி கரிஷ்மா கபூர், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் வரவேற்றனர் .

கரீனா கபூர் இன்ஸ்டாவில் இணைந்த சில மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்துள்ளனர். இன்ஸ்டாவின் டீபியாக (முகப்புப் பகுதி) கரீனா தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வைத்துள்ளார்.

கரீனா தற்போது ஆமீர் கான் நடிப்பில் இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்துவருகிறார். இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.