ETV Bharat / science-and-technology

ஒரே நேரத்தில் இரு போன்களில் வாட்ஸ்அப்.. புதிய அப்டேட் நியூஸ்!

author img

By

Published : Nov 15, 2022, 4:01 PM IST

இனி இரண்டு ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்
இனி இரண்டு ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்

வாட்ஸ்ஆப் செயலியில் இனி ஒருவர் தனது வாட்ஸ்ஆப் முகப்பை ஒரே நேரத்தில் இரு வேறு செல்போன்களில் பயன்படுத்திக் கொள்ளும் புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாஷிங்டன்: ஒன்றுக்கு மேலான செல்போன்களில் ஒரே வாட்ஸ்அப் எண்னை வைத்து பயன்படுத்தும் புதிய வசதியை பயன்பாட்டாளர்களுக்கு கூடிய விரைவில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. ‘கம்பானியன் மோட்’(Companion mode) எனப்படும் இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டாளர்கள் இனி தங்களின் வாட்ஸ்அப்(Whatsapp) முகப்பை ஒன்றுக்கு மேலான செல்போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் நான்கு ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரு வாட்ஸ்அப் முகப்பை இந்த புதிய அப்டேட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது இந்த அப்டேட் பீட்டா பயன்பாட்டாளர்கள் (Beta Users) மத்தியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'QR code' மூலம் பல்வேறு ஸ்மார்ட் போன்களில் பயன்பாட்டாளர்கள் தங்களது வாட்ஸ்அப் முகப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களால் தங்களது முகப்பை ஒரு ஸ்மார்ட் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும், ஆனால் இனி இந்த புதிய அப்டேட்டின் மூலம் இரு வேறு செல்போன்களில் ஒருவர் ஒரே நேரத்தில் தனது வாட்ஸ்அப் முகப்பிற்குள் நுழைந்து பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: விரைவில் வருகிறது 'ட்விட்டர் பேமன்ட்ஸ்' வசதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.