ETV Bharat / lifestyle

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கைப்பேசிகள்!

author img

By

Published : Dec 18, 2020, 7:16 AM IST

2020 Top Smartphone Brands in India
2020 Top Smartphone Brands in India

கவுண்டர் பாய்ண்ட் மேற்கொண்ட பகுப்பாய்வில், 2020ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் கைப்பேசி விற்பனைச் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடத்திலும், சியோமி, விவோ, ரியல்மீ, ஒப்போ ஆகிய நிறுவனங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

ஹைதராபாத்: இந்தியாவில் 2020இன் மூன்றாவது காலாண்டில் ஐந்து கோடியே 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கவுண்டர் பாய்ண்ட் என்ற பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவின் 2020ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 24 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டு, சாம்சங் நிறுவனம் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முறையே மிகவும் நெருக்கமாக 23 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டு சீன நிறுவனமான சியோமி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

மொத்தமாக இந்தியாவில் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஐந்து கோடியே, 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளன. முன்பிருந்ததைவிட நான்கு விழுக்காடு வளர்ச்சிக் கண்டு விவோ நிறுவனம் சந்தையில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

முறையே ரியல்மீ, ஒப்போ நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன. ப்ரீமியம் நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒன் ப்ளஸ் சந்தை மதிப்பு வளர்ந்து ஆப்பிள் நிகர் போட்டியாக வலம்வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.