ETV Bharat / lifestyle

ஒரு லட்சம் ரூபாயில் வெளியாகியுள்ள சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!

author img

By

Published : Aug 11, 2020, 6:25 PM IST

சாம்சங் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்டிரா என்று புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

Galaxy Note 20 series
Galaxy Note 20 series

கரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக டெக் உலகிலும் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன் வெளியீடுகளைத் தள்ளி வைத்தன.

தற்போது, சீனா உட்பட பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சாம்சங், சியோமி, கூகுள், ரியல்மி என பல நிறுவனங்களும் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்ற விழாவில் தனது புகழ்பெற்ற கேலக்ஸி நோட் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்டிரா சிறப்புகள்

  • 6.70 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 865+ பிராசஸர்
  • பின்புறம் 108 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 10 மெகாபிக்சல் கேமரா
  • 5ஜி வசதி
  • 4500mah பேட்டரி
  • பாதுகாப்பிற்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் வசதி
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் சாம்ச் ஒன் இயங்குதளம்

விலை

  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 104,999

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சிறப்புகள்

  • 6.70 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
  • எக்ஸினோஸ் 990 பிராசஸர்
  • பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 64 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 10 மெகாபிக்சல் கேமரா
  • 4300mah பேட்டரி
  • பாதுகாப்பிற்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் வசதி
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் சாம்ச் ஒன் இயங்குதளம்

விலை

  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 77,999

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இன்று முதல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: 100 கோடி டாலர்களுக்கு அதிபதியான ஆப்பிள் சிஇஓ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.