ETV Bharat / international

சீன பலூனின் உடைந்த பாகங்களை மீட்க அமெரிக்கா நடவடிக்கை!

author img

By

Published : Feb 5, 2023, 4:55 PM IST

US
US

அமெரிக்கா சுட்டு வீழ்த்திய சீன பலூனின் உடைந்த பாகங்களை மீட்கும் பணியில் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 31ஆம் தேதி, மொன்டானா மாகாணத்தில் உள்ள அணுசக்தி தளத்தின் மேலே சந்தேகத்திற்கிடமாக ராட்சத பலூன் ஒன்று பறந்தது. அந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா கூறியது.

அந்த பலூன் ரகசியமாக தரவுகளை சேகரிக்க வந்திருக்கும் என நம்பிய அமெரிக்கா அதை சுட்டு வீழ்த்த முடிவு செய்தது. ஆனால், அணுசக்தி தளத்திற்கு மேலே பலூனை சுட்டால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என அச்சம் ஏற்பட்டதால், அப்போது பலூனை சுடவில்லை.

நேற்று(பிப்.4) அந்த பலூன் நகர்ந்து அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிக்கு சென்றதையடுத்து, அங்கு அமெரிக்கா அந்த உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க விமானிகளுக்கு அதிபர் பைடன் பாராட்டு தெரிவித்தார். அதேபோல் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பலூன் உளவு பலூன் இல்லை என்றும், அது மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்ட விண் ஓடம் என்றும் சீனா விளக்கமளித்தது. வானிலை ஆய்வு பணியில் இருந்த அந்த பலூன் திசைமாறி, தவறுதலாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது சர்வதேச நடைமுறைகளை மீறும் செயல் என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சுடப்பட்ட சீன பலூனின் பாகங்களை மீட்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பலூனின் உடைந்த பாகங்களிலிருந்து, அதன் தன்மை, அதிலிருந்த தொழில்நுட்பம் உள்ளிட்டவறை குறித்து ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவுகிறது.

இதையும் படிங்க: உளவு பலூன் விவகாரம்: சீனாவுக்கு நோ சொன்ன அமெரிக்கா.. என்ன தான் பிரச்சினை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.