ETV Bharat / international

எரிபொருள் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் - பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து.. 16 பேர் பலி!

author img

By

Published : Aug 20, 2023, 2:11 PM IST

Pakistan Accident
Pakistan Accident

Increased Road Accident on Pakistan: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற வேன், பயணிகள் பேருந்து மோதிக் கொண்ட கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் மற்றும் பயணிகள் பேருந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 35 முதல் 45 பயணிகளுடன் பேருந்து சென்றது.

பேருந்து பஞ்சாப் மாகாணம், பிண்டிபட்டியான் பகுதியில் உள்ள பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து பிண்டிபட்டியான் காவல்துறை அதிகாரி ஃபஹத் கூறும்போது, "டீசல் எற்றி வந்த வேன் மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த பலர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இரண்டு வாகனத்தின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ நேரத்தில் விபத்து நடந்த இடத்தின் அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பேருந்தினுள் சிக்கிய மற்ற பயணிகளை பத்திரமாக மீட்டதாக" தொிவித்தார்.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் நடைபெற்ற ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துக்களில் 17 பேர் உயிாிழந்தனர். மேலும் ஆயிரத்து 773 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி லாகூாிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சாலை விபத்துக்களால் காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக வந்ததால் அனைவரையும் கையாள முடியாத நிலை ஏற்பட்டதாக தொிவிக்கபட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஆகஸ்ட் 14ஆம் தேதி எற்பட்ட சாலை விபத்தினால் லாகூரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பியது. இதனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சுமை ஏற்பட்டதாக தகவல் தொிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அவசர சேவை துறை (ESD) தொிவித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி ஆகஸ்ட் 14ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் 99 பேர்களுக்கு தலையில் பலத்த காயமும், 187 பேர்களுக்கு எலும்பு முறிவுகளும், 850 பேர்களுக்கு படுகாயங்களும் மற்றும் 891 பேர்களுக்கு சிறிய காயங்களும் என மொத்தம் ஆயிரத்து 773 பேர் காயமடைந்ததாக தொிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் அவசர சேவை துறை (ESD) தொிவித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி ஆகஸ்ட் 13ஆம் தேதி மட்டும் ஆயிரத்து 234 சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 338 பேர் காயமடைந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு கேள்விக்குறி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.