ETV Bharat / international

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு கேள்விக்குறி!

author img

By

Published : Aug 19, 2023, 4:22 PM IST

Imran Khan
Imran Khan

Imran Khan could be poisoned in Attock jail: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அட்டாக் சிறையில் எனது கணவருக்கு விஷம் கொடுக்கப்படலாம் என்பதினால் அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி எழுதிய கடிதத்தில், அட்டாக் சிறையில் இருக்கும் தனது கணவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது மேலும் அட்டாக் சிறையில் தனது கணவருக்கு விஷம் கொடுக்கப்படலாம் மேலும் தனது கணவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து உள்ளார். நீதிமன்றம் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்ற உத்தரவிட்டும், எந்தவித நியாயமும் இல்லாமல் தனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நீதிமன்ற சட்டத்தின்படி என் கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்.

2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அரசியல் கட்சியின் தலைவராக இம்ரான் கான் இருந்த போது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை விற்பனை செய்தது தொடர்பான தோஷகானா வழக்கில் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்காரணமாக, இம்ரான் கான் அரசியலில் இருந்து 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனது கணவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்து கருதி சிறையில் அவருக்கு B-வகுப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும் மேலும் தற்போது உள்ள அட்டாக் சிறையில் வசதிகள் இல்லாததால் தனது கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் தொிவித்து உள்ளார்.

கடந்த காலங்களில் தனது கணவர் இம்ரான் கான் மீது இரண்டு முறை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, தனது கணவர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து உள்ளது மேலும் அட்டாக் சிறையில் தனது கணவருக்கு விஷம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதனால், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு தனது கணவர் இம்ரான் கானை மாற்றி B-வகுப்பு சிறை வழங்கவும், வீட்டில் சமைத்த உணவையும் சிறையில் சாப்பிட அனுமதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.