அதிபர் பைடன் வீட்டில் FBI சோதனை - ரகசிய ஆவணங்கள் பறிமுதல்!

அதிபர் பைடன் வீட்டில் FBI சோதனை - ரகசிய ஆவணங்கள் பறிமுதல்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எஃப்பிஐ(FBI) அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்களை பைடன் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக இருந்தவர். பைடன் துணை அதிபராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான பல முக்கிய ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) அதிபர் பைடனின் வீடு மற்றும் தனி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. கடந்த 20ஆம் தேதி பைடனின் வீட்டில் சுமார் 13 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனையின்போது ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனும் வீட்டில் இல்லை, அவர்கள் வார விடுமுறையை கழிக்க சென்றிருந்ததாக தெரிகிறது. இந்த சோதனை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பைடன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்கள் பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பைடன் தொடக்கம் முதலே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக தெரிகிறது. இருந்தபோதும் இந்த விவகாரம் அமெரிக்க மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பைடன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழுவை அமைத்து அமெரிக்க அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம்.. இங்கிலாந்து பிரதமருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!
