காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம்.. இங்கிலாந்து பிரதமருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

author img

By

Published : Jan 22, 2023, 7:18 AM IST

rishi sunak

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு லன்காஷயர் காவல்துறை இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வடக்கு பிரிட்டன் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் பிரதமர் ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், ரிஷி சுனக்கிற்கு எதிராக பலரும் கண்டன குரல் எழுப்பத் தொடங்கினர். இதே செயலை பொதுமக்கள் யாராவது செய்திருந்தால் காவல்துறை என்ன செய்திருக்கும்? என்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் சீட் பெல்ட் விவகாரத்தில் பிரதமர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்தது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து, "காரில் சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து விதிகளின்படி 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. 500 பவுண்ட் என்பது இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம் ஆகும்.

2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் கூட்டத்தில் கரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பிரதமர் போரிஷ் ஜான்சன், அவரது மனைவி கேரி ஜான்சன் அவர்களுடன் சேர்ந்து ரிஷி சுனக்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Airport: செயற்கைகோள் செல்போனுடன் வந்த அமெரிக்கர் கைது.. உளவாளியா என விசாரணை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.