ETV Bharat / international

டெல்டா வைரஸுக்கு எதிராக 90% பாதுகாப்பு தரும் ஸ்புட்னிக் தடுப்பூசி!

author img

By

Published : Jul 11, 2021, 3:35 PM IST

Sputnik V
Sputnik V

கோவிட்-19 டெல்டா ரக வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி 90% பாதுகாப்பு தருவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று உருமாறி பல வகை தொற்றுகளாக தற்போது பரவிவருகிறது. அதில், டெல்டா வகை தொற்று உலகளவில் அதிக தீவிரத்தன்மையுடன் பரவிவருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகளின் பாதுகாப்புத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருன்றனர்.

அதன்படி, ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்டா வகை கரோனாவுக்கு எதிராக 90% பாதுகாப்பு தருவதாகவும், உயிரிழப்புக்கு எதிராக 100% பாதுப்பு தருவதாகவும் ரஷ்ய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானி செர்கே நெடிஸ்வோ தெரிவித்துள்ளார்.

உலகளவில் கோவிட்-19 பாதிப்புக்கு எதிராக முதலில் அறிமுகமான தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியே. 2020ஆம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்குவந்தது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அடுத்தபடியாக ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டி நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்கிறது.

இதையும் படிங்க: கந்தகார் தூதரகத்தை காலி செய்த இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.