ETV Bharat / international

பெருந்தொற்றுக்கு இடையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

author img

By

Published : Apr 25, 2021, 6:23 PM IST

Everest
Everest

காத்மாண்டு: பெருந்தொற்று நெருக்கடிக்கு இடையிலும், உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் செய்ய இந்தாண்டு இதுவரை 394 அனுமதிகளை நேபாளம் வழங்கியுள்ளது.

நேபாளத்தின் சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஏப்.23) வரை எவரெஸ்ட் பயணத்திற்கு 394 அனுமதிகளை வழங்கியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 381 அனுமதிகளின் முந்தைய சாதனையை முறியடித்தது.

இதுதொடர்பாக சுற்றுலாத்துறையின் இயக்குநர் மீரா ஆச்சார்யா கூறுகையில்," சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஏப்.23 ஆம் தேதி வரை எவரெஸ்ட் பயணத்திற்கு 394 அனுமதிகளை பதிவு செய்துள்ளது.

இது 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 381 அனுமதிகளின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. பயணக் குழுக்களுக்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம், அதற்கான முறையான நடைமுறைகளுடன் விண்ணப்பித்தோம் என்றார்.

எவரெஸ்ட் சிகிரத்தின் மீது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து, தீவிர ஆய்வுக்கு மத்தியில் நேபாள அரசின் நடவடிக்கை வந்துள்ளது. எவரெஸ்ட், அதன் திருத்தப்பட்ட உயரம் 8848.86 மீட்டர் ஆகும்.

"எவரெஸ்ட் சிகர பயணங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நேபாளம் பெரிதும் நம்பியுள்ளது. எவரெஸ்டில் போக்குவரத்து நெரிசல் குறித்து, எந்த தகவலும் கிடைக்கவில்லை" என்று மீரா ஆச்சார்யா கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை ஏற அனுமதி பெறுவதற்கு, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் நபருக்கு 11,000 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.

மவுண்ட் எவரெஸ்டுக்கு சர்வதேச அளவிலான மலை ஏறுபவர்கள் காட்டிய உற்சாகம், எவரெஸ்ட் மீதான அவர்களின் ஆர்வமும், அன்பையும் காட்டுகிறது. தொற்றுநோய் இருந்தபோதிலும் நேபாளத்தின் சுற்றுலாவை அதிகரிக்க இது நிச்சயமாக உதவும் என்று காத்மாண்டுவின் '7 சமிட் டிரெக்ஸ்' அமைப்பின் தலைவர் மிங்மா ஷெர்பா தெரிவித்தார்.

இந்த வாரம் எவரெஸ்ட் முகாமில் முதலாவதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. எவரெஸ்ட் முகாமுக்குச் செல்வதற்கு முன் மலை ஏறுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நேபாளம் வலியுறுத்தியுள்ளது. நேபாளத்தில் இதுவரை 2,97,087 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இத்தொற்றால் இதுவரை 3,136 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.