ETV Bharat / entertainment

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை பாகம் 1!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 7:54 PM IST

Viduthalai
விடுதலை திரைப்படம்

rotterdam film festival: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி - சூரி நடித்துள்ள ‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

சென்னை: எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய படம்தான் ‘விடுதலை 1’. இதனை வெற்றிமாறன் இயக்கி இருக்க, நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'லைம்லைட் (LIMELIGHT)' பிரிவின் கீழ் திரையிடப்பட இருக்கிறது என்பதை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அறிவித்துள்ளார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் ‘விடுதலை’ படம் மூலம், நமது இந்தியத் திரையுலகை பிரதிநிதித்துவப்படுத்துவது எங்களுக்கு பெருமையும், மரியாதையும் ஆகும். நன்மதிப்பு பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், தங்களது படத்தையும் திரையிட வேண்டும் என்பது சினிமாவில் பலருடைய கனவு.

இந்த வாய்ப்பு இப்போது எங்களுக்கு கிடைத்திருப்பதில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். பல நம்பிக்கையூட்டும் கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. இது சினிமாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

இந்த வரிசையில் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ திரைப்படமும் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்சியைக் கொடுக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் மிடாஸ்-டச் மொழி, பிராந்தியம் போன்ற தடைகளைத் தாண்டி, உலகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. விஜய்சேதுபதி, சூரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் நிபந்தனையற்ற கடின உழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்றார்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் பட விழாவில் அத்துமீறலா? ஐஸ்வர்யா கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.