ETV Bharat / entertainment

DnA கூட்டணியில் தாய் கிழவியை தொடர்ந்து 'மேகம் கருக்காதா' - ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

author img

By

Published : Jul 13, 2022, 2:10 PM IST

Updated : Jul 13, 2022, 2:16 PM IST

”திருச்சிற்றம்பலம்” படத்தின் செகண்ட் சிங்கிள்!!
”திருச்சிற்றம்பலம்” படத்தின் செகண்ட் சிங்கிள்!!

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இவர் தற்போது நான்காவது முறையாக தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தினை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, வெளியான இந்த படத்தின் "தாய்க்கிழவி” பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது பாடல் "மேகம் கருக்காதா" என்ற பாடல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ப்ரோமோ வீடியோவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்தால் நன்றாக இருக்கும் - கவிஞர் வைரமுத்து

Last Updated :Jul 13, 2022, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.