ETV Bharat / entertainment

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

author img

By

Published : Sep 1, 2022, 12:58 PM IST

Updated : Sep 1, 2022, 2:29 PM IST

தனது காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்
தனது காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

திண்டிவனத்தில் குக் வித் கோமாளி புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்.

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான புகழ், அதன்பின் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

அந்த வகையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜயின் யானை, சந்தானத்தின் சபாபதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் மிஸ்டர் ஜூ கீப்பர் என்னும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகி உள்ளார்.

தனது காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

இதனிடையே தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை விரைவில் திருமணம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து இன்று (செப். 1) திண்டிவனத்தை அடுத்த தீவனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோவிலில் புகழ் மற்றும் பென்சியா எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். பலர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சந்தானம் நடிக்கும் புதிய படம் 'கிக்' !

Last Updated :Sep 1, 2022, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.