ETV Bharat / entertainment

சந்தானம் நடிக்கும் புதிய படம் 'கிக்' !

author img

By

Published : Aug 31, 2022, 9:29 PM IST

கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ’கிக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சந்தானம் நடிக்கும் புதிய படம் 'கிக்' !
சந்தானம் நடிக்கும் புதிய படம் 'கிக்' !

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ’கிக்’ என்று பெயரிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்த இதன் படப்பிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து முடிவடைந்தது. இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரித்துள்ளார்.

இப்படம்மூலம், பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரெஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். இத்திரைப்படத்தில் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகன் ஒவ்வொரு செயலையும் கிக்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் 'சந்தானம்' பாணியில் டைரக்டர் உருவாக்கி உள்ளாராம். இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட்கள் அமைத்து, அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள். இது ஒரு சந்தானத்தின் அக்மார்க் திரைப்படம் என்றும்; குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ்

இசை: அர்ஜூன் ஜன்யா

ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ்

கலை: மோகன் பி.கேர்

எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா

ஸ்டன்ட்: Dr.ரவி வர்மா
டேவிட் காஸ்டில்லோ

நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர்

இதையும் படிங்க: “பேப்பர் ராக்கெட்” வெற்றியைப்பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.