ETV Bharat / entertainment

பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் விஷாலின் 'மார்க் ஆண்டனி' இன்று இந்தியில் ரிலீஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:41 PM IST

Mark Antony Hindi Release: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தி மொழியில் இன்று வெளியாகிறது

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பலர் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டைம் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

  • Now that we have crossed the magic figure & created a bench mark in all south languages for #MarkAntony.

    Thanks for the support & encouragement from one & all who have entered the #WorldOfMarkAntony by watching it in theatres worldwide.

    Now it’s time to showcase the Hindi… pic.twitter.com/KUF1jnUbjs

    — Vishal (@VishalKOfficial) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகளில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது. மேலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய ’அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ எதிர்பார்த்த அளவு ஓடாததால் மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தது.

ஆனால் மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றி ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல கம்பேக்காக அமைந்துள்ளது. மேலும் நடிகர் விஷால் நடித்த படங்களில் மார்க் ஆண்டனி அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், இன்று இந்தியில் வெளியாகிறது என நடிகர் விஷால் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் "மார்க் ஆண்டனி திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று பல மேஜிக்குகளை நிகழ்த்தியுள்ளது. மார்க் ஆண்டனி படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பு வட இந்தியா முழுவதும் இன்று (செப்.28) வெளியாகிறது.

சினிமாவிற்கு மொழி ஒரு தடை கிடையாது. இந்தியிலும் மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நடிகர் விஷால் ”4,5 கோடிகளை கொண்டு சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டாம். அதனை வங்கி கணக்கில் போட்டு சேமித்து வைக்கலாம்” என கூறியது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 1 வாங்கினா இன்னொன்னு ப்ரீ! ஜவான் படக் குழு கொடுத்த அதிரடி ஆபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.