ETV Bharat / entertainment

கமலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு 'விருமாண்டி' திரைப்படம் ரீ-ரிலீஸ்.. ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 1:47 PM IST

virumandi re-release
விருமாண்டி

Virumandi re-release: கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் விருமாண்டி திரைப்படம் மூன்று நாட்களுக்கு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

விருமாண்டி

சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நேற்று (நவ.6) விருமாண்டி திரைப்படம் திரையிடப்பட்டது. நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு 'விருமாண்டி' திரைப்படம் திரையிடப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான இந்த படத்தை, ரீ-ரிலீஸ் என்ற பெயரில் 3 நாட்களுக்கு திரையிடப்பட்டு, அந்த படத்திற்கான டிக்கெட்டின் விலை ரூ.49-க்கு விற்பனையா‌கிறது.

ரீ ரிலீஸ் செய்யப்படும் விருமாண்டி திரைப்படத்தை, ரோபோ சங்கர் தலைமையில் திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திரையரங்க வளாகத்தில் இந்த கொண்டாட்டங்கள் நேற்று அரங்கேறின. இதில் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும், தேங்காய் உடைத்தும் உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

இதற்காக பாதுகாப்பு பணியில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். திரையரங்கத்திற்கு ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர், சினேகன், அவரது மனைவி கன்னிகா உள்பட பலரும் வந்தனர். விருமாண்டி திரைப்படம் கமல் இயக்கிய படங்களில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

தூக்கு தண்டனைக்கு எதிராக இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் ஊர் பழக்க வழக்கங்கள், சாதி பிரச்னை, வன்முறை என சமூகம் கலந்த திரைக்கதை அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டிருந்தது. அகிரா குரஷோவா இயக்கிய ராஷமோன் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. ஒரு சம்பவத்தை ஒவ்வொருவரின் பார்வையிலும் விளக்கும் புதிய வகை யுக்தி கொண்ட திரைக்கதை அட்டகாசமாக அமைந்திருக்கும்.

முதலில் இப்படத்திற்கு சண்டியர் என பெயரிடப்பட்டது. பின்னர் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு “விருமாண்டி” என பெயர் மாற்றினார், கமல். இது குறித்து மிகுந்த ஆதங்கத்துடன் கமல் பேசிய வீடியோ அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம்.. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி - குவியும் பாராட்டுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.