ETV Bharat / sports

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம்.. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி - குவியும் பாராட்டுகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 12:29 PM IST

Vaishali: பிரிட்டனில் நடபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில், தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Tamil Nadu chess player Vaishali is the champion title Eligible for candidates chess competition
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம்.

லண்டன்: ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் பிரிட்டனில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் மங்கோலியா வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் தமிழக வீராங்கனையான வைஷாலி மோதினார். இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. இருப்பினும், அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில், வைஷாலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும் 20 லட்சம் ரூபாயையும் அவர் பரிசுத் தொகையாக வென்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 34வது நகர்த்தலின்போது டிரா ஆனது. சுற்றுகளின் முடிவில் 8.5 புள்ளிகள் பெற்றதால், முதலிடம் பிடித்தார் வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகியுள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில் கூறியுள்ளதாவது, “இந்த போட்டி எனது வாழ்கையில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இது ஒரு அணுபவம்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆண்கள் பிரிவில் உலகக் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், அவருடைய சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகிய நிலையில், தற்போது வைஷாலி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உட்பட பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  • A moment of immense pride as India takes the top spot in the FIDE Grand Swiss Open.

    Congratulations to @viditchess and @chessVaishali for their outstanding victories, and for securing their spots in the prestigious 2024 Candidates, to be held in Toronto.

    This is yet another… pic.twitter.com/GgbsWa48D6

    — Narendra Modi (@narendramodi) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் மோடி: இது குறித்து பிரதமர் மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “செஸ் வீரர் விதித் மற்றும் வைஷாலியின் வெற்றி இந்திய திறமைக்கு மற்றொரு உதாரணம். பிட் கிராண்ட் ஸ்விஸ் ஓபனில் இந்தியா முதல் இடம் பிடித்ததில் மகத்தான பெருமை” என பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: FIDEGrandSwiss-இல் பட்டங்களை வென்ற உங்கள் அசாத்திய திறமைக்கு வாழ்த்துகள். சிறந்த திறமை, உறுதிப்பாடு மற்றும் இடைவிடாத மனப்பான்மையுடன், நீங்கள் தேசத்தைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Congratulations to @chessvaishali on her victory at the FIDE Women's Grand Swiss 2023 held in the UK. Tamil Nadu beams with pride as Vaishali and her brother @rpragchess made history as the first brother-sister duo to qualify for the respective Candidates to be held in 2024. I… pic.twitter.com/eor5zr3kTs

    — Udhay (@Udhaystalin) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “2024 இல் நடைபெறவுள்ள செஸ் கேண்டிட் தொடருக்கு தகுதி பெற்ற முதல் சகோதர சகோதரி என்ற வரலாறு படைத்த வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் சர்ச்சைக்குரிய முறையில் மேத்யூஸ் அவுட்டானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.