ETV Bharat / entertainment

வெளியானது ராமராஜன் படத்தின் பர்ஸ்ட்லுக்

author img

By

Published : Sep 18, 2022, 8:58 PM IST

வெளியானது ராமராஜன் படத்தின் பர்ஸ்ட்லுக்
வெளியானது ராமராஜன் படத்தின் பர்ஸ்ட்லுக்

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகும் ‘சாமானியன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று(செப்.18) வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகனாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர், ராமராஜன். 'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்‌பிறகு இவர் நடிப்பில் வெளியான ’எங்க ஊரு பாட்டுகாரன்’ உள்ளிட்டவை வெற்றிப் படங்களாக அமைந்தன.

வெளியானது ராமராஜன் படத்தின் பர்ஸ்ட்லுக்
வெளியானது ராமராஜன் படத்தின் பர்ஸ்ட்லுக்

குறிப்பாக கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்து வெளியான 'கரகாட்டக்காரன்' திரைப்படம் ரஜினி, கமல் படங்களுக்கு நிகராக ஆண்டுக் கணக்கில் ஓடி சாதனைப் படைத்தது.

அதனைத்தொடர்ந்து, சில படங்களில் நடித்தார். இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்திருந்தார். பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அரசியலில் நட்சத்திரப் பேச்சாளராகப் பயணிக்கத் தொடங்கினார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ஓர் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ’சாமானியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார்.

இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் ’சாமானியன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகர் விஜய் சேதுபதி இன்று(செப்.18) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சலசலப்பில் முடிந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக்கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.