ETV Bharat / entertainment

கியூட் லுக்கில் விஜய்.. மாஸாக இணைந்த நட்சத்திரங்கள் - தளபதி 68 பட பூஜை வீடியோ வெளியானது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 1:51 PM IST

Updated : Oct 24, 2023, 7:13 PM IST

thalapathy 68
தளபதி 68

Thalapathy 68 pooja video release: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படமான “தளபதி 68” படத்தின் பூஜை வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம், “தளபதி 68”. இந்த படத்தை ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 20 வருடத்திற்குப் பிறகு விஜய்-யுவன் கூட்டணி இணைய உள்ளது. முன்னதாக புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்தார்.

கடந்த மே 21ஆம் தேதி "தளபதி 68" படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிப்பு வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் அப்டேட் லியோ திரைப்படம் வெளியானதும் அறிவிக்கப்படும் என வெங்கட் பிரபு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் “தளபதி 68” படத்தின் பூஜை வீடியோ, இன்று (அக்.24) மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது "x" தளத்தில் தெரிவித்தார். அதன்படி படத்தின் பூஜை வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் புதிய கெட்டப்பில் விஜய்யின் லுக் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் ஆகியோரை இந்த விடியோவில் படக்குழு அறிவித்து உள்ளது. அதில், நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் என பலரும் நடிக்க உள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்களான சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் என பலரும் “தளபதி 68” படத்தில் இணைகின்றனர் என படக்குழு தரப்பில் வெளியான பூஜை வீடியோவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:இசையை விட தூய்மையானது எது.. - இமான் உடன் கைகோர்த்த பார்த்திபன்!

Last Updated :Oct 24, 2023, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.