ETV Bharat / entertainment

இசையை விட தூய்மையானது எது.. - இமான் உடன் கைகோர்த்த பார்த்திபன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 11:53 AM IST

Parthiban combined with Iman: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது அடுத்த படத்தில் இசையமைப்பாளர் டி.இமானுடன் இணைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அறிவித்துள்ளார்.

Parthiban combined with Iman
இமானுடன் இணைந்த பார்த்திபன்

சென்னை: தனது வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் புதுமை இயக்குநகராக அறியப்படுபவர், இயக்குநர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படத்தை மிகவும் சிரமப்பட்டு ஒரே டேக்கில் அதாவது சிங்கிள் டேக் - நான் லீனியர் படமாக உருவாக்கியிருந்தார்.

  • வா’வென
    வாய் பிளந்து
    வரவேற்று
    வாய் நனைய முத்தமிட்டு
    இறுதிவரை இருக்க விரும்பி
    இறுக அணைத்தாலும்…
    திட்டமிட்டபடி
    சட்டென விட்டு
    வி ல கி
    சென்றுவிடும்
    சென்ற வினாடிகள் !!!

    தும்பைப் பூவின் மீது
    தூய்மையான
    பனித்துளி படர்ந்து
    தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
    மெலோடியாய்… pic.twitter.com/HMxUHClRZ9

    — Radhakrishnan Parthiban (@rparthiepan) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய சினிமாவில் வெளியான முதல் நான் லீனியர் படம் இதுவே எனலாம். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். பல்வேறு திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று, ஏராளமான விருதுகளைப் பெற்றது இரவின் நிழல் திரைப்படம். இதனையடுத்து பார்த்திபன் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் நிறைய படங்களில் பிஸியாக இருப்பதால் முடியாது என்று சொல்லி விட்டதாகவும், பார்த்திபன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு இமான் இசை அமைத்து வருகிறார். இதனை பார்த்திபன் தனது (X) எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "வா.. வெனவாய் பிளந்து வரவேற்றுவாய் நனைய முத்தமிட்டு, இறுதிவரை இருக்க விரும்பிஇறுக அணைத்தாலும். திட்டமிட்டபடி சட்டென விட்டுவிலகி சென்றுவிடும். சென்ற வினாடிகள். தும்பைப் பூவின் மீது தூய்மையான பனித்துளி படர்ந்து தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூடமெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதுமுண்டு.

இசையை விட தூய்மையானது எது? சென்ற படத்தில் ரஹ்மானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான்…. இமான், அபார ஞானமும் அயராத உழைப்புமாய் அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில். மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.

  • மகிழ்ச்சி! But அந்த lyricist-ஐ
    இன்னொரு நாள் introduce பண்லாம்னு நினைச்சேன்.அதை நீங்களே சொன்னது பெருமகிழ்ச்சி.Thanks!அப்புறம் அப்டியே அந்த 6-வது ட்யூன்…. https://t.co/GWcEtHiDOf

    — Radhakrishnan Parthiban (@rparthiepan) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இனி… இனிமை இசையாய்… Ok! Tittle? அறிவிப்போம் விரைவில்” என்று தெரிவித்துள்ளார். இந்த படம் எந்த மாதிரியான கதை என்றும், யார் யார் நடித்துள்ளனர் என்றும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பார்த்திபனின் 'X' வலைத்தளப் பதிவிற்கு இமான் பதில் அளித்துள்ளார்.

அதையும் குறிப்பிட்டு, “மகிழ்ச்சி! But அந்த lyricist-ஐ இன்னொரு நாள் introduce பண்லாம்னு நினைச்சேன். அதை நீங்களே சொன்னது பெருமகிழ்ச்சி. Thanks! அப்புறம் அப்டியே அந்த 6-வது ட்யூன்….” என பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: “தளபதி 68” படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.