ETV Bharat / entertainment

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா?

author img

By

Published : Nov 3, 2022, 7:05 PM IST

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!
மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!

இயக்குநர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. உண்மைச்சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருது போட்டி வரை சென்று வந்தது.

இப்படத்தின்‌மூலம் நடிகர் சூர்யாவின் மதிப்பும் உயர்ந்தது. இத்தகைய படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தையும் சூர்யாவே தயாரிக்கிறார்.

இப்படமும் உண்மைச்சம்பவங்களை தழுவி எடுக்கப்பட உள்ளதாகவும்; இதிலும் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படித்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
’ஜெய் பீம்’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் எழுதும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.