ETV Bharat / entertainment

'சீதா ராமம்’ படத்தில் ராஷ்மிகா தான் ஹனுமான்..! - துல்கர் சல்மான்

author img

By

Published : Jul 26, 2022, 6:16 PM IST

’’சீதா ராமம்’ல ராஷ்மிகா தான் ஹனுமான்..!’ - துல்கர் சல்மான்
’’சீதா ராமம்’ல ராஷ்மிகா தான் ஹனுமான்..!’ - துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதா ராமம்’ படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ‘சீதா ராமம்’. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூலை 26) அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

மேலும், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய துல்கர் சல்மான், “நான் எவ்வளவோ மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இதுபோல் ஓர் கதையை நான் கேட்டதே இல்லை. என்னுடன் நடித்த அனைவரும் மிகவும் நன்றாக பணியாற்றியுள்ளனர். பல பேர் நான் ஏன் தமிழில் வெறும் லவ் ஸ்டோரிகளில் மட்டும் நடிக்கிறேன் என்று கேட்கிறார்கள். அது எதிர்பாராமல் நடப்பது தான். விரைவில் வேறு கதைகளுடனும் தமிழ் ரசிகர்களை சந்திப்பேன்” எனப் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் துல்கர் சல்மான் பதிலளித்தார்.

கேள்வி: தொடர்ந்து ரோமாண்டிக் கதைகளில் நடிப்பது சோர்வளிக்கவில்லையா..?

துல்கர்: நான் முன்பே சொன்னது போல் அது உண்மை தான். ரசிகர்களின் சினிமா ரசனைகளும், எதிர்பார்ப்பும் தற்போதைய காலக்கட்டத்தில் மாறியுள்ளன. அதையும் கருத்தில் கொண்டு தான் இனி படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

கேள்வி: இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் நடப்பதைப் போல் தெரிகிறதே..? இது ஒரு வரலாற்று படமா..?

துல்கர்: இல்லை. இக்கதைக்களத்தின் காலக்கட்டம் ஓர் பீரியட் தான். மற்றும் இதை ஒரு காதல் கதையாக மட்டுமே சுருக்கி விட முடியாது. இதனுள் பல அம்சங்களும் உள்ளன. இயக்குநர் ஓர் கவிதை போல் இதை வடிவமைத்துள்ளார்.

கேள்வி: உங்க அப்பாவுக்கு வந்த லவ் லெட்டர்களை படித்ததுண்டா..?

துல்கர்: நான் படிச்சதில்லை..! ஆனா அதைப் பத்திலாம் அவர் என்னிடம் சொல்லிருக்காரு.

கேள்வி: ’சீதா ராமம்’ ல யார் ஹனுமான்..?

துல்கர்: அப்படி பார்த்தால் இதில் ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தை ஹனுமான் என்று சொல்லலாம்.

கேள்வி: நீங்க ஒரு மல்டி ஹீரோ படம் பண்ணுவீங்களா..?

துல்கர்: நிச்சயம். நான் எதற்கும் தயாராக தான் உள்ளேன்.

கேள்வி: இப்படிப்பட்ட பான் இந்தியத் திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் உருவாகும் திரைப்படங்கள் எப்படி அனைத்து கலாசாரத்திற்கும், மக்களுக்கும் தொடர்புடையதாகவும் திருப்தி அளிக்கும் வகையிலும் அமைய முடியும்..?

துல்கர்: எனக்கும் அதில் உடன்பாடில்லை. ஆனால் ஒரு சில கதைகள் அனைவராலும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ’சீதா ராமம்’ அப்படிப்பட்ட ஓர் கதை தான். இது ஓர் ’இந்தியக் கதை’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ட்விட்டரில் தெறிக்க விடும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.