ETV Bharat / entertainment

"துருவ நட்சத்திரம் இன்று ரிலீஸ் ஆகவில்லை".. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெளதம் வாசுதேவ் மேனன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 9:11 AM IST

Updated : Nov 24, 2023, 11:03 AM IST

Dhruva natchathiram release date postponed
துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது

Dhruva natchathiram release: நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், இன்று படம் வெளியாகவில்லை என இயக்குநர் கெளதம் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: இயக்குநர் கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்பட்ட படம், 'துருவ நட்சத்திரம்'.இந்தப் படத்தின் பணிகள் 2017ஆம் ஆண்டிலே தொடங்கிய நிலையில், 2018ஆம் ஆண்டில் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாறிக் கொண்டே சென்றது. இதையடுத்து, துருவ நட்சத்திரம் இன்று (நவ.24) வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதன்படி, படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக, நடிகர் சிம்பு நடிப்பில் 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்க ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 2.40 கோடி ரூபாய் பணத்தை வாசுதேவ் மேனன் வாங்கியதாகவும், ஆனால் படத்தின் பணிகளை முடிக்காமலும், பணத்தையும் நிறுவனத்திற்கு தராமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பணத்தைத் திரும்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று (நவ.24) காலை 10.30 மணிக்குள் 2 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் வாசுதேவ் மேனன் திருப்பி அளித்தால் படம் வெளியடப்படும் என நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தது.

இருப்பினும், படம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், படம் இன்று வெளியாகவில்லை என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், “மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரவில்லை. முடிந்தவரை நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது எனத் தெரிகிறது. உலகெங்கிலும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திரையிடல்கள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம்.

படத்துக்கான ஆதரவு மனதிற்கு ஆறுதலாகவும், மேலும் எங்களை முன்னோக்கித் தொடர வைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!

Last Updated :Nov 24, 2023, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.