ETV Bharat / entertainment

”ராக்கெட்ரி” படத்தை பார்த்துவிட்டு மாதவனை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

author img

By

Published : Jul 5, 2022, 3:48 PM IST

Updated : Jul 5, 2022, 4:08 PM IST

”ராகெட்ரி” படத்தை பார்த்துவிட்டு மாதவனைப் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
”ராகெட்ரி” படத்தை பார்த்துவிட்டு மாதவனைப் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

நடிகர் மாதவன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’, வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும், நடிகர்களும் இப்படத்தைப் பார்த்து, பாராட்டி வருகின்றனர். நேற்று(ஜூலை 4) நடிகர் ரஜினி ராக்கெட்ரி படத்தைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 5) நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், ராக்கெட்ரி படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவன் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் மாதவனின் தோளை தட்டிக்கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், டைரக்‌ஷன் மற்றும் வசனம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மகாபாரத கதையை இயக்குகிறாரா ராஜமௌலி?

Last Updated :Jul 5, 2022, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.