ETV Bharat / entertainment

ஓடிடியில் வெளியானது அஜித்தின் துணிவு!

author img

By

Published : Feb 8, 2023, 12:30 PM IST

Updated : Feb 8, 2023, 12:47 PM IST

ஓடிடியில் வெளியானது அஜித்தின் துணிவு
ஓடிடியில் வெளியானது அஜித்தின் துணிவு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் கடந்தாண்டு அஜித் நடித்து வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த படத்தின் கூட்டணியில் உருவான 'துணிவு' மாபெரும் வெற்றி பெற்றது.

துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிய இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடியாதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தில் அஜித்தின் நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தற்போது வரை ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது சில பகுதிகளில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் துணிவு படமானது இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற குழப்பம் நீடித்து வருவதால் அது தொடர்பான கருத்துக்களும் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இரண்டு சூப்பர் ஸ்டார்கள்!

Last Updated :Feb 8, 2023, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.