ETV Bharat / entertainment

நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இரண்டு சூப்பர் ஸ்டார்கள்!

author img

By

Published : Feb 7, 2023, 7:32 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் - மோகன் லால் திடீர் சந்திப்பு!
ரஜினிகாந்த் - மோகன் லால் திடீர் சந்திப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய‌ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார் என முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் நடைபெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு ரஜினிகாந்த் மற்றும் மோகன் லால் இருவரும் சந்தித்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மோகன் லால் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் என்றாலும் தற்போது ஜெய்சல்மார் சென்றுள்ளது, தாம் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்திற்காக தான் என்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் அங்குதான் நடக்கிறதாம். இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பதால் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:சாதிப் பெயரை நீக்கிய 'வாத்தி' பட நடிகைக்கு குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.