ETV Bharat / crime

நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள்...மோசடிக்கு நவீன சிம் பாக்ஸ்...ஒடிசாவில் மோசடி கும்பல் கைது

author img

By

Published : Sep 15, 2022, 10:57 AM IST

நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள்...மோசடிக்கு நவீன சிம் பாக்ஸ்...ஓடிசாவில் மோசடி கும்பல் கைது
நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள்...மோசடிக்கு நவீன சிம் பாக்ஸ்...ஓடிசாவில் மோசடி கும்பல் கைது

ஒடிசாவில் போலி எஸ்எம்எஸ்கள் மூலம் ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பலையும், மோசடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் சைபர்கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புவனேஸ்வர்: மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குண்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட பண்டகான் கிராமத்தில் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தும் சிம் பாக்ஸ் கட்டாக் குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் நிலையம் கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷால் கண்டேல்வால் என்ற ஜோண்டி மற்றும் கூட்டாளிகள் தபஸ் குமார் பத்ரா, நிகம் பத்ரா, சுதன்சு தாஸ், அஜு பத்ரா மற்றும் அஜய் குமார் பத்ரா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு துறையின் ரகசிய தகவலின் பேரில், ஒடிசா குற்றப்பிரிவு போலீசார் பெட்டாநதி மற்றும் பரிபாடாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி அனைவரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான சிம்கள் மற்றும் பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிம் பெட்டிகளில் (இயந்திர அடிப்படையிலான எண்கள்) மூலம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களை ஏமாற்றுவதற்காக அதிக எண்ணிக்கையிலான சிம்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை தெரிவித்தது.

இந்த சிம் பாக்ஸ்கள் மூலம் பல மொபைல் எண்களில் இருந்து பல செல்போன்ளுக்கு MTNL, KYC மோசடி எஸ்எம்எஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சிம் பெட்டிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான KYC தொடர்பான மோசடி செய்திகள் உருவாக்கப்பட்டு, ஏமாற்றும் நோக்கத்திற்காக ஏராளமானோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ஒடிசா மற்றும் பீகாரில் செயல்பட்டு வருகின்றனர்.

முன்னதாக ஜூலை 2017 இல், ஒடிசா போலீசார் பெர்ஹாம்பூரில் இதேபோன்ற மோசடியை முறியடித்து நான்கு பேரை கைது செய்தனர். மூளையாக செயல்பட்ட விஷால், சுதன்சு மற்றும் நிகாம் வழங்கிய செயல்படுத்தப்பட்ட சிம்களைப் பயன்படுத்தி, சிம் பாக்ஸ் வாங்கி, தபாஸை செய்தி அனுப்புவதற்காக ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மோசடி எஸ்எம்எஸ்களை பரப்பி வந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, தபஸ் அஜுவையும், அஜய்யையும் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர்.

சிம் பாக்ஸ் மோசடி : சிம் பாக்ஸ் என்பது நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை கணினி வழியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சாதனமாகும். சிம் பாக்ஸ் மோசடி என்பது தொலைத்தொடர்பு செயல்பாடுகள் உலகளவில் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும்.

சிம் பாக்ஸ் மோசடியானது சர்வதேச அழைப்புகளை இணையம் மூலம் செல்லுலார் சாதனத்திற்குத் திருப்புகிறது. இந்த சாதனத்திற்கு பயன்படுத்துவதற்கு நூற்றுக்கணக்கான குறைந்த விலை அல்லது விலையில்லாத சிம் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். அவை பெரும்பாலும் போலி அடையாளங்கள் மூலம் பெறப்படுகின்றன.

இதையும் படிங்க: அமராவதி பாத யாத்திரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த 79 வயது விவசாயி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.