ETV Bharat / city

லாரி ஓட்டுநரை ஏமாற்றி 5 ஆயிரம் பணம் பறித்த 5 திருநங்கைகள் கைது!

author img

By

Published : Mar 19, 2021, 2:23 PM IST

Updated : Mar 19, 2021, 2:32 PM IST

திருநங்கைகள் பணம் பறிப்பு விழுப்புரம் மாவட்டச் செய்திகள் cheating lorry driver Transgender Transgender people arrested
திருநங்கைகள் பணம் பறிப்பு விழுப்புரம் மாவட்டச் செய்திகள் cheating lorry driver Transgender Transgender people arrested

லாரி ஓட்டுநரை ஏமாற்றி 5 ஆயிரம் பணம் பறித்த 5 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் வேல்முருகன் (43). இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து லாரியில் பொருள்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேலூரை அடுத்த பொய்கை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் நின்றுள்ளார். அங்கு வந்த திருநங்கைகள் 5 பேர் வேல்முருகனிடம் லாரியை ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏதும் நடக்காமல் இருக்க மந்திரம் போடுவதாக கூறி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து வேல்முருகன் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை ஆய்வாளர் அல்லிராணி, சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் திருநங்கைகளான தன்ஷிகா, பிரியா உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கௌகொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : விவசாயிகளுக்கு ஆதரவாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம்!

Last Updated :Mar 19, 2021, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.