ETV Bharat / city

பாம்பன் பாலத்தில் தொடர் பராமரிப்புப்பணி - செப்.19 வரை ரயில்கள் இயக்கத்தடை

author img

By

Published : Jul 11, 2021, 9:16 PM IST

பாம்பன் பாலம்
பாம்பன் பாலம்

பாம்பன் ரயில் பாலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பர் 19ஆம் தேதி வரை, பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்கத் தடை விதித்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் ஜூன் மாதம் 28ஆம் தேதி பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின் ரயில் இயக்கிய மறுநாளே மீண்டும் சென்சாரில் கோளாறு ஏற்பட ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐஐடி குழுவினர் சென்று ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி வரை பாலத்தின் மீது பயணிகள் ரயில் சேவை நிறுத்தம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் பயணிகளில்லாத ரயில் ராமேஸ்வரம் வரை சென்று மீண்டும் மண்டபம் எடுத்து வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாம்பன் ரயில் பாலத்தின் மீது பயணிகளுக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சேவையில் மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விவரம் கீழ்வருமாறு:

  • வண்டி எண் 02205 மற்றும் 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் ஜூலை 14 முதல் செப்டம்பர் 13 வரை மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • வண்டி எண் 02206 மற்றும் 06852 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ஜூலை 15 முதல் செப்டம்பர் 14 வரை மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
  • வண்டி எண் 06849 மற்றும் 06850 திருச்சிராப்பள்ளி - ராமேஸ்வரம் - திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில்கள் ஜூலை 15 முதல் செப்டம்பர் 14 வரை ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06618 கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 20 முதல் செப்டம்பர் 14 வரை ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • புதன்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06617 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 21 முதல் செப்டம்பர் 15 வரை ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
  • வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06780 ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில் ஜூலை 15 முதல் செப்டம்பர் 12 வரை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
  • வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமைகளில் திருப்பதியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06779 திருப்பதி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 16 முதல் செப்டம்பர் 13 வரை ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் மாண்டர்டிஹ்-ல் இருந்து புறப்படும் வண்டி எண் 05120 மாண்டர்டிஹ் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 18 முதல் செப்டம்பர் 12 வரை மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • புதன்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 05119 ராமேஸ்வரம் - மாண்டர்டிஹ் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 21 முதல் செப்டம்பர் 15 வரை மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06733 ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 16 புதன் செப்டம்பர் 10 வரை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
  • செவ்வாய்க்கிழமைகளில் ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 13 முதல் செப்டம்பர் 14 வரை மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமைகளில் புபனேஸ்வரில் இருந்து புறப்படும் வண்டி எண் 08496 புபனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 16 முதல் செப்டம்பர் 10 வரை மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 08495 ராமேஸ்வரம் - புபனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 18 முதல் செப்டம்பர் 12 வரை மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இதையும் படிங்க: தனி யூனியன் பிரதேசம் ஆகிறதா மேற்கு மண்டலம்? - கொங்கு நாடு சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.