ETV Bharat / city

வால்பாறையை அடுத்த முத்து முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

author img

By

Published : Feb 5, 2022, 8:02 PM IST

வால்பாறையை அடுத்த முத்து முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு
வால்பாறையை அடுத்த முத்து முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் நேற்றிரவு (பிப்ரவரி 4) காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை உடைத்து ரேசன் அரிசியைத் தின்றதால் செரிமானம் இன்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் துணை கள இயக்குநர் கணேசன், மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்டோர் தலைமையில் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு உடல் பரிசோதனை ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை வேட்டைத் தடுப்பு காவலர்கள், இறந்த யானையின் பக்கம் வரவிடாமல் அங்கும் இங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

அதன்பின் வால்பாறை வனச்சரக வேட்டைத் தடுப்பு காவலர்கள் அந்த யானையை உடற்கூறு நடைபெறும் இடத்திற்கு வராமல் தடுத்து நிறுத்திய பின்னரே கால்நடை மருத்துவர் சுகுமாரன் உடற்கூராய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்கள் கடந்த வாரம்தான் அப்பகுதியில் இரண்டு வயது குட்டி யானை பல மாதங்களாக இறந்த நிலையில், காணப்பட்ட சோகம் தீர்வதற்குள் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அலுவலர்கள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாஜகவின் முதுபெரும் தலைவர் மறைவு: அமித் ஷா, தலைவர்கள் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.