ETV Bharat / city

ரேக்ளா பந்தயம்: முதல் பரிசு இதுவா...? - மகிழ்ச்சியில் உரிமையாளர்கள்!

author img

By

Published : Mar 27, 2022, 6:45 PM IST

ரேக்ளா பந்தயம் செய்தி
ரேக்ளா பந்தயம் செய்தி

கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 300க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தைக் கண்டுரசித்தனர்.

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகேயுள்ள கணியூர் கிராமத்தில் ரேக்ளா கிளப், மற்றும் கே.பி.ஆர் கல்வி குழுமத்தின் சார்பில் காளையர் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயத்தில் இயற்கை உரப் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்நிலையில் 3ஆவது ஆண்டாக நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, மயிலை, காரி, செவலை, மலையன், காங்கயன் இனக் காளைகள் பூட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

ரேக்ளா பந்தயம் செய்தி
ரேக்ளா பந்தயம் செய்தி

இதில் 200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். கரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே பந்தயத்தை காண அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு பல், நான்கு பல் உள்ள காளைகள் குறைந்த தூரமும், நான்கு பல்லுக்கு மேல் உள்ள காளைகள் அதைவிட சற்று அதிக தூரமும் ஓட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 200 மற்றும் 300 மீட்டர் தூரத்தை குறைந்த வினாடிகளில் கடந்த 30 வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக 2 பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஈரோட்டில் மதிமுகவின் புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகம் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.