ETV Bharat / city

ஈரோட்டில் மதிமுகவின் புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகம் திறப்பு

author img

By

Published : Mar 27, 2022, 2:38 PM IST

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலக கட்டடத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

வைகோ
வைகோ

ஈரோடு: சூரம்பட்டி நால்ரோடு அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகம் ஏப்ரல் 2001ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழுதான நிலையில் புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை இன்று (மார்ச் 27) அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

மதிமுக கட்சி அலுவலக திறப்பு விழா

அதனைத் தொடர்ந்து, கட்சியினரிடையே பேசுகையில், "மதிமுகவின் மாவட்ட அலுவலகம் 2001ஆம் ஆண்டு ஏப்.17 ஆம் தேதி இங்கே தொடங்கப்பட்டது. மகப்பேறு மருத்துவமனை இருந்த இந்த இடத்திற்கு அமைச்சரின் மகன் உள்ளிட்ட எண்ணற்ற குழந்தைகளை ஈன்றெடுத்த பெருமையை பெற்றுள்ளது. மேலும், மதிமுகவின் ரத்த தான மையம் செயல்பட்ட இடம்.

திராவிட இயக்கம் பாடுபடும்: உதவி தேவைப்படும் துயரப்படுகிறவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு திராவிட இயக்கம் என்றைக்கும் பாடுபடும். பெரியாரின் மண்ணில் இருந்து இதை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்றோர் திராவிட இயக்கத்தைக் கட்டிக்காத்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்துத்துவவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை தாக்க வேண்டும். என்றும் அந்தக் கடமை தமிழ்நாடு மக்களுக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தற்காலிக இச்சைக்காக முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் அண்ணாமலை - திருமா காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.