ETV Bharat / state

தற்காலிக இச்சைக்காக முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் அண்ணாமலை - திருமா காட்டம்

author img

By

Published : Mar 27, 2022, 1:01 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஊடகங்கள் தன்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காகவும், தற்காலிக இச்சைக்காகவும் அவதூறுகளை பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புவதாக பெரம்பலூரில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமா காட்டம்
திருமா காட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் விசிக மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டுவின் தாயார் நீலாவதி ராமசாமி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் பங்கேற்று நீலாவது ராமசாமி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், "ஒன்றிய அரசு தனியார்மயமாதல் என்பதை தீவிரப்படுத்தப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது. லாபத்தில் இயங்க கூடிய நிறுவனங்கள் கார்ப்பரேட்டிடம் ஒப்படைக்கப்படுகிறது. பொது வேலை நிறுத்தத்தில் விசிக தொழிற்சங்கம் பங்கேற்கும்.

ஆதராமற்ற குற்றச்சாட்டு: அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் நிறைவேற வேண்டும்; கனவு நனவாக வேண்டும். தொழில் துறையில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமையும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல முதலமைச்சர் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஊடகங்கள் தன்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்கும், கவன ஈர்ப்புக்காகவும் தற்காலிக இச்சைக்காக இப்படிப்பட்ட அவதூறுகளை பாஜக மாநில தலைவரும், பாஜகவும் பரப்பி வருகிறது.

மேலும், அரசியல் களத்திலே தமக்கு வேண்டாத கொள்கை கொண்ட பகைவர்களை நாகரீகம் இல்லாமல் பேசுவதில் இருந்து அண்ணாமலை புத்தகங்களை படிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் மத்திய பாஜக அரசு மீது கடும் அதிருப்தில் உள்ளனர். மக்களிடம் மத உணர்வு , சாதி உணர்வு ஆகியவற்றை தூண்டி அரசியல் ஆதாயத்திற்கு, பாஜகவினர் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர்" என்றார். இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிகோ இருதய ராஜ், பிரபாகரன் மற்றும் விசிக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நகை கடன் தள்ளுபடி: இந்தியாவிலேயே இதுவே முதல் முறை - அமைச்சர் ஐ.பெரியசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.