ETV Bharat / city

விருமன் பட வெற்றி விழா - நன்றி தெரிவித்த படக்குழுவினர்

author img

By

Published : Aug 17, 2022, 12:37 PM IST

Etv Bharatவிருமன்  பட வெற்றி விழா - நன்றி தெரிவித்த படக்குழுவினர்
Etv Bharatவிருமன் பட வெற்றி விழா - நன்றி தெரிவித்த படக்குழுவினர்

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி நடிப்பில் வெளியான விருமன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அதன் வெற்றி விழா சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது.

சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விருமன் வெற்றி விழா சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நடந்தது.

விழாவில் முதலில் பேசிய நடிகர் ஜெகன், ‘ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவராக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து சிறப்பித்தார். மேலும் துணை நடிகர்களான வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா ஆகியோர் அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள்.

கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்று கூறினார். இந்திரஜா பேசும்போது, சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த 2D நிறுவனத்திற்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

நிகழ்ச்சியில் அதிதி
நிகழ்ச்சியில் அதிதி

பின்னர் பேசிய நடிகர் கார்த்தி, ‘விட்டுக்கொடுத்து செல்வது தான் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல. சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத்தன்மை வேண்டும். நம்மை விட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை சினிமா மூலம் ஞாபகப்படுத்தி இருக்கிறோம்’ என கூறினார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்: இதனைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், ‘இதைவிட வேறு என்ன வேண்டும். இந்தப்படத்தின் கதை கேட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் நம்பி செய்வோம் என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுதுகொண்டே சொன்னார். இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம் போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம். ராஜாவிற்கு நன்றி. பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு..
இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல் என்று கூறினார்.

நடிகர் சூர்யா : கரோனா காலகட்டத்தில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த கடுமையான சூழலில் நடித்த, நடிகர், நடிகைகள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் ஏற்கனவே நன்றி தெரிவித்துவிட்டோம். அவர்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளோம். ஆனால், கேமேராவுக்கு பின்பு வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. தயாரிப்புப் பணிகளை செய்த ராஜாவுக்கு நன்றி. இப்படம் உருவாகுவதற்கு இயக்குநர் முத்தையா எப்படியோ, அதே போல் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முதல் வெளியாகும் வரை இருந்த ராஜாவும் முக்கிய காரணம். ராஜா மூலமாகத் தான் இந்த வெற்றியை இன்று அடைய முடிந்தது என நடிகர் சூர்யா தெரிவித்தார்.

இங்கு அனைவரையும் வரவழைத்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டேன். அதை ராஜா மிகவும் அழகாக நடத்திக் காட்டியுள்ளார். அனைவருக்கும் நன்றி எனக் கூறினார். மேலும், ‘என் தங்கை பிருந்தா மற்றும் செல்வி சொன்ன விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. "எங்களுக்கு சொர்க்கம் என்றால், நாங்கள் சாப்பிட்ட தட்டை வேறு ஒருவர் கழுவுவதில் தான் சொர்க்கம்" எனக் கூறினர். பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி என்றார்.

இதையும் படிங்க:ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகும் யானை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.