ETV Bharat / city

தீண்டாமை சுவர்: மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 3, 2019, 10:22 PM IST

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்களுக்கு  நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நபர்களுக்கு நீதி கேட்டு பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் சுற்று சுவர் இடிந்து அதனை ஒட்டியுள்ள நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இடிந்து விழுந்த சுவரின் உரிமையாளர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த செந்தில் பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செந்தில், சுவர் இடிந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்த நேரத்தில் அதற்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதோடு, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை அகற்றவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தீண்டாமை சுவர்: "தந்தையின் மனிதத்தால் மரணிக்காத பிள்ளைகள்"

Intro:Body:கோவை மேட்டுப்பாளையத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்துக்கு நீதி கோரி சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

இடிந்து விழுந்த சுவரின் உரிமையாளர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்தேச மக்கள் முன்னணியின் செந்தில் பேசுகையில், சுவர் இடிந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்த நேரத்தில் அதற்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது நடத்தியதோடு, கைது செய்து சிறையில் அடைத்திருப்பதையும் வன்மையாக கண்டிப்பதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை கண்டறிந்து அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.