ETV Bharat / city

முதியோர் பசி தீர்க்க உடன்பிறப்பு உணவகம் தொடங்க வேண்டும் - சிந்தனைச் செல்வன்

author img

By

Published : Aug 18, 2021, 10:08 PM IST

சிந்தனைச் செல்வன்
சிந்தனைச் செல்வன்

கிராமங்களில் முதியோர் பசி தீர்க்க உடன்பிறப்பு உணவகம் தொடங்க வேண்டும் என விசிக சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது உடன்பிறப்பு உணவகம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை

இது குறித்து அவர் பேசுகையில், “முதலமைச்சரின் ஆட்சியில் சமூகநீதி மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது. தமிழ் சமூகத்திற்கு ஆகச் சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார். கழக ஆட்சியில் மருத்துவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பிற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு ஊதியம் சிறப்பாக உள்ளது.

10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் 100 நாள்களில் நிறைவேற்றப்பட்டன. வேளாண் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து திட்டங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

வேளாண் துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் இருக்கின்றன. மேலும், ஒரு கோரிக்கையாக நிலமற்ற கூலி விவசாயிகளின் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆலோசித்து இந்த நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம்

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருக்கும் போதிலும் அரசு ஒப்பந்த பணிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். முதியோர்களின் பசியைப் போக்கும் வகையில் "உடன்பிறப்பு உணவகம்" என்ற பெயரில் கிராமங்களில் உணவகம் ஒன்றை நிறுவ வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம் என்பதை போன்று மக்களை தேடி நிர்வாகம் என்ற திட்டத்தை நிறுவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெட்ரோல் விலை குறைப்பு: திருமாவளவன் பாராட்டு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.