ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 3PM

author img

By

Published : Aug 20, 2021, 2:55 PM IST

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

1. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. ’பக்கத்து மாநிலங்களில் பத்திரிகை விளம்பரத்திற்கு பணம் செலவழிக்கும் தமிழ்நாடு அரசு’ - அண்ணாமலை தாக்கு

சென்னை: மக்கள் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கூறும் தமிழ்நாடு அரசு, தனது நூறு நாள் சாதனை குறித்து பக்கத்து மாநிலங்களில் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து பணம் செலவழித்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

3. மோப்ப நாய்களின் 10 ஆண்டு பயணம் நிறைவு... பிரிய மனமின்றி தவித்த அலுவலர்கள்!

சென்னை விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜி,பாதல் ஆகிய இரண்டு மோப்ப நாய்களும் ஓய்வு பெற்றன.

4. தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

புளியந்தோப்பு கே.பி பார்க் குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்டடத்தைக் கட்டிய குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து குடிசை மாற்று வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

5. ராஜிவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(ஆகஸ்ட். 20) மரியாதை செலுத்தினார்.

6. சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், மத்திய மருந்து தர நிலை கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

7. இந்தியாவில் மேலும் 36,571 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஆக.19) ஒரேநாளில் கரோனா தொற்றால் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

8. ஓபிசி சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மாநில அரசுகள் ஓபிசி பட்டியலை தயாரிக்க அதிகாரம் அளிக்கும் 127ஆவது சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 20) ஒப்புதல் அளித்துள்ளார்.

9. ஆப்கனில் பறக்கும் விமானத்திலிருந்து மூவர் விழுந்த நிகழ்வு: உயிரிழந்த தேசிய கால்பந்து வீரர்!

ஆப்கனில், அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில், அந்நாட்டின் கால்பந்து வீரரும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

10. வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்...’ - 'கேஜிஎஃப் 2' அப்டேட் வெளியிட்ட இயக்குநர்!

'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.