ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3PM

author img

By

Published : Aug 10, 2021, 2:57 PM IST

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

1. அண்ணா பல்கலை. துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. 'திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து!'

அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

3. போராட வாங்க சாப்பிட்டுப் போங்க - வேலுமணியின் கூத்து

வேலுமணி விவகாரத்தைப் பொறுத்தவரை, ஸ்டாலினேகூட தன்னுடைய தேர்தல் பரப்புரையில், “நானே தலையிடுவேன்” என்று கூறியது வேலுமணி தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

4. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

5. ஆகஸ்ட் 13ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. ரெய்டுக்கு பதில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றலாம் - பொள்ளாச்சி ஜெயராமன்

ரெய்டு நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை செய்யலாம் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

7. சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான உயிரி எரிபொருள்- World Biofuel Day

நமது பாரம்பரிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் இருக்கும் உயிரி எரிபொருள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு இன்று உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

8. சோனியா காந்தியைச் சந்திக்கும் பஞ்சாப் முதலமைச்சர்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பின் அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் சோனியா காந்தியைச் சந்திக்கிறார்.

9. உண்மையான தியாகம்: தடகள வீராங்கனை ஹீமா தாஸ் தனலட்சுமிக்கு ஆறுதல்

டெல்லி: தங்கை உயிரிழந்தது தெரியாமல் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பிய தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு தடகள வீராங்கனை ஹீமா தாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

10. 'ஸ்கேம் 1992' தொடர் இயக்குநரின் புதிய படம்: தயாரிப்பாளராகும் கரீனா கபூர்!

நடிகை கரீனா கபூர் 'ஸ்கேம் 1992' இணையத்தொடரை இயக்கிய ஹன்சல் மேத்தா இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.