ETV Bharat / city

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரூ. 17.88 கோடி ஒதுக்கி அரசாணை

author img

By

Published : Apr 2, 2022, 8:29 AM IST

Tamil Nadu GO for Idol Wing
Tamil Nadu GO for Idol Wing

தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சிலை தடுப்புப் பிரிவு காவல்துறையினரின் எண்ணிக்கையை உயர்த்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை காவல் துறை மானியத்தின் போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை மேம்படுத்த 17 கோடியே 88 லட்சத்து 56 ஆயிரத்து 791 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, நிதியானது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சிலை தடுப்புப் பிரிவில் உட்கட்டமைப்பை மேம்படுத்த, காணாமல் போன சிலைகளை வல்லுநர் குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 3 துணை காவல் கண்காணிப்பாளர், 9 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 130 பேரும், நிர்வாகம் மற்றும் அமைச்சக பணியாளர்கள் 11 அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான ஊதியம், வாகனம் மற்றும் போக்குவரத்து செலவிற்கு என 13 கோடியே 71 லட்சத்து 53 ஆயிரத்து 791 ரூபாய் ஒதுக்கீடு செய்தும், கணினி, வாகனங்கள், உபகரணங்கள் வாங்க ரூ. 4 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: 500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை : ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.