ETV Bharat / city

முன்களப் பணியாளர்கள் முன்வந்து தடுப்பூசி போட வேண்டுகோள்!

author img

By

Published : Aug 4, 2021, 10:57 PM IST

மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர்
மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர்

இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், முன்களப் பணியாளர்கள் முன்வந்து தடுப்பூசி போடவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் சிறுநீரக சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தற்போது 13 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. அண்மையில் கரோனா தொற்று லேசாக அதிகரித்து வருகிறது. அதற்கான தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

நாளை (ஆக. 05) கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

காணொலிக் காட்சி வாயிலாக எட்டு மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர்
மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர்

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

முன்கள பணியாளர்கள் 80 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 40 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது. இரண்டாம் தவணை போடாதவர்கள் முன்வந்து தடுப்பூசி போடவேண்டும்.

96 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக புகார் வந்துள்ளது. மக்கள் சிகிச்சைக்கு செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க முற்பட்டால், உடனடியாக சுகாதாரத்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இனி வெளியே செல்ல முடியாது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.