ETV Bharat / city

சென்னையில் நீர் தேங்குதல் ஓரளவு குறைந்திருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Nov 9, 2021, 7:20 PM IST

சென்னை நிலைமை குறித்து ஸ்டாலின்
சென்னை நிலைமை குறித்து ஸ்டாலின்

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களின் நிலைமை குறித்து முதலமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று (நவ.09) நேரில் ஆய்வு செய்ய செல்லும் வழியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. அதில்,

கேள்வி: நீங்கள் நிறையப் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படியிருக்கிறது?

முதலமைச்சர் பதில்: மழையால் பாதிக்கப்பட்டு நீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: நீர் தேங்குதல் பிரச்னை குறைந்திருக்கிறதா?

சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர்

பதில்: ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது, முழுமையாகக் குறையவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே முந்தைய ஆட்சி 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசிடமிருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை.

முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சித் துறையின் சார்பாகப் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்து பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்த பிறகு, இதுகுறித்து உரிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.

கேள்வி : இதெல்லாம் முடிந்தபிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில் : நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க:தொடர் மழை - அம்மா உணவகத்தில் இலவச உணவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.