ETV Bharat / city

ஒமைக்ரான் பதற்றம் அடையக் கூடிய உருமாற்றம் அடையவில்லை - ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Dec 5, 2021, 4:52 PM IST

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தற்போதைய சூழலில் ஒமைக்ரான் பதற்றம் அடையக் கூடிய உருமாற்றம் அடையவில்லை, மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு கட்டுப்பாட்டுடன் இருக்கும் பட்சத்தில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் தொண்டு நிறுவனம் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திரு.வி.க.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கரோனா காலகட்டத்தில் தன்னலமற்று பணியாற்றிய சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்பினர் என ஏராளமானோர் ஒவ்வொரு வகையில் மக்களுக்கு உதவினார்.

பாஸிட்டிவ் வந்தால் இப்படி எடுத்துக்கொள்ள வேண்டாம்

அந்த வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட களப் பணியாளர்களுக்கு விருதினை ராதாகிருஷ்ணன், தாயகம் கவி, விக்கிரமராஜா ஆகியோர் பரிசளித்து கவுரவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "கரோனா காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பணியாற்றின. ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் கரோனா காலத்தில் சமூக சேவையாற்றின.

தற்போதைய சூழலில் ஒமைக்ரானை பொறுத்தவரை பதற்றம் அடையக்கூடிய உறுமாற்றம் கொண்டதாக இல்லை. விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. கரோனா பாஸிட்டிவ்-யை ஒமைக்ரான் பாசிட்டிவ் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.

விமானத்தில் வந்த 4,502 பயணிகளை பரிசோதனை செய்ததில், இதுவரை தமிழ்நாட்டில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதல்கட்ட டேக்பாத் கிட் பரிசோதனையில் 5பேருக்கு நெகட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை

இதனையடுத்து 1.27 லட்சம் தெருக்களில் 1.25 லட்சம் தெருக்களில் நோய் தொற்று கிடையாது, 100 பேரில் சோதனை செய்தால் 1க்கும் குறைவானவருக்கே தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க மாநில எல்லையில் கண்காணிக்கப்படுகிறது. தொற்று பாதித்த நபர்களை Contact tracing எடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் தான் 314 கரோனா ஆய்வகங்கள் உள்ளன. அதில் 12 ஆய்வகங்களில் மரபணு சோதனை செய்யப்படுகிறது. தற்போது வரை 638 பேர் டெங்கு சிகிச்சை மாநிலம் முழுவதும் பெற்று வருகின்றனர்.

வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை இருந்தாலும் மக்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை. அது தான் தற்போது அதிகரித்து வருகிறது, விழிப்புணர்வோடும், கட்டுப்பாடோடும் மக்கள் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TN WEATHER: நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.