ETV Bharat / city

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் 67 பேருக்கு கரோனா!

author img

By

Published : Jan 6, 2022, 9:26 AM IST

கரோனா
கரோனா

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் 67 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையான எம்.ஐ.டி கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. அங்கு உள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்குத் தொடர்ச்சியாகக் காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 1417 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 67 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வார காலம் விடுமுறை

67 மாணவர்களின் மாதிரிகளைச் சேகரித்து ஒமைக்ரான் தொற்று பாதிப்பா எனக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகம் ஒரு வார காலம் விடுமுறை அளித்துள்ளது. மேலும் பல மாணவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று ஏற்பட்டு 67 மாணவர்களில் 53 பேர் கல்லூரி விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. 13 மாணவர்களை வீட்டுத் தனிமையில் இருக்க அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையாளர் மு.ரவி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவ குழுவினரிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தனர்,

கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், "சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி 19 மாணவிகள் உள்ளிட்ட மாணவர்களுக்கு 67 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர்கள் புதியதாக அமைத்த இரண்டு கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி
குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி

மேலும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், பொறுத்தவரை கரோனா பரிசோதனைகள் நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் வீதம் எடுக்கப்படுவதால் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையாளர் மு.ரவி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு அறிவித்துள்ளபடி, கரோனா விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் உரிய தகுந்த இடைவெளி கடைபிடிக்கவேண்டும்; முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: TNPSC Exams: தள்ளிப்போகும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.