ETV Bharat / city

சென்னை ஜார்ஜ் கோட்டையும்... முதல்முதலாக பறந்த தேசியக் கொடியும்...

author img

By

Published : Aug 13, 2022, 3:47 PM IST

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றிய விடுதலை போராட்ட வீரர் யார் என்பது குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

சென்னை ஜார்ஜ் கோட்டையும் தேசிய கொடியும் சிறப்பு தொகுப்பு
சென்னை ஜார்ஜ் கோட்டையும் தேசிய கொடியும் சிறப்பு தொகுப்பு

சென்னை: நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மாநில முதலமைச்சர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். இந்த நேரத்தில், ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடியை ஏற்றிய முதல் சுதந்திர போராட்ட வீரர் யார்..? 75 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் பழைபெரும் தேசியக் கொடி எங்குள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோமாக.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான பாஷ்யம் (இயற்பெயர் ஆர்யா) 1932ஆம் ஆண்டில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் யாரும் கவனிக்காத வகையில் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, தேசியக் கொடியை ஏற்றினார். இவரே ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல் நபர்.

இளம் வயதிலேயே தேசிய சேவை: தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள சேரங்குளம் கிராமத்தில் 1907ஆம் ஆண்டில் பிறந்தார் பாஷ்யம். 'சுதேசமித்திரன்' ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ. ரங்கசாமி ஐயங்கார் இவரது உற்ற உறவினராவார். இவர் மன்னார்குடியில் கல்வி பயின்றார்.

விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம்
விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம்

இவருக்கு 11 வயதிருக்கும்போத ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அப்போதிருந்தே இவருக்கு போராட்ட குணம் தோன்றிவிட்டது. இதையடுத்து நீடாமங்கலம் தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 1932ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியை நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

கோட்டையில் முதல் கொடி: இந்த வேண்டுகோளை ஏற்ற பாஷ்யம் ராட்டை பொறிக்‌கப்பட்ட அப்போதைய தேசியக் கொடியை தயார் செய்தார். அந்தக்கொடியில் ‘இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது’ என்று எழுதி தனது சட்டைக்குள் மறைத்துக் கொண்டார். அதேநேரத்தில் ஒரு காவலர் போல வேடமிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தார்.

கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிமரத்தில் மடமடவென ஏறத் தொடங்கினார். அப்போது கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கின் ஒளி கொடிமரத்தில் பட்டு செல்லும் நேரத்தைக்கூட கணக்கில் வைத்துக்கொண்டு, பொறுமை காப்பதும், முன்னேறுவமாக ஏறினார். கொடி மரத்தில் உச்சிக்கு சென்ற பிறகு யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றி அங்கிருந்து தப்பிவிட்டார். காலையில் இக்கொடியினைக் கண்ட கோட்டை பாதுகாப்பு வீரர்கள் பதட்டமடைந்தனர். ஆளுநருக்கு செய்தி போயிற்று.

தலைமை செயலகமாக அறியப்படும் ஜார்ஜ் கோட்டை

இந்த கொடியை ஏற்றியவரை தேட ஆணையிடப்பட்டது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சரியாக 15 ஆண்டுகள் கழித்து நாடு சுதந்திரம் அடைந்தது. அந்த வகையில் 1947ஆம் ஆண்டில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் விடியற்காலை 5.30 மணிக்கு மீண்டும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அன்றைய தினம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தவர் யார்? என்பது தொடர்பாக வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், பட்டுத் துணியில் 12 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட அந்த பிரமாண்ட கொடி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பழைமையான தேசியக் கொடி: இந்த கொடியை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பழைமையான  தேசியக் கொடி
நாட்டின் பழைமையான தேசியக் கொடி

கண்ணாடி பதித்த மரத்தினாலான பேழையில் வைக்கப்பட்டுள்ள இந்த பட்டு கொடி தட்பவெப்ப நிலையினால் உருக்குலைந்துப் போகாமல் இருக்கும் வகையில் ரசாயனங்கள் கலந்து வைக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மிக பழைமையான ஒரே தேசியக் கொடி என்னும் வரலாற்று தனிச்சிறப்பு பெற்றுள்ள இந்த கொடி பேணிப் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை கருதுவதுபோல தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னயில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் மேலும் ஒரு சிறப்பாக இருக்கும் முதல் தேசியக் கொடி போற்றுவோமாக.

இதையும் படிங்க: கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வூட்டிய சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.