ETV Bharat / city

'போராட்டம் என்றால் நான் முதலாவதாக வந்து நிற்பேன்; ஏனெனில் நான் ஒரு போராட்டக்காரன்' - ராமதாஸ் மாஸ் பேச்சு!

author img

By

Published : Apr 24, 2022, 8:01 PM IST

ராமதாஸ் பேச்சு
ராமதாஸ் பேச்சு

’ராமதாஸ் ட்விட்டரில் அறிக்கை மூலம் போராட்டம் அறிவித்தால், மோடியாக இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தாலும் அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். ஏனென்றால், ராமதாஸ் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும்' என ஏற்றுக்கொள்வதாக அன்புமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலச்சங்கம், தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றச் சங்கம் ஆகிய 2 சங்கங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடக்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய ராமதாஸ், 'அந்த காலத்தில் பெற்றோர், ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகள் கண்ணை மட்டும் விட்டுவிடுங்கள். தோலைக்கூட உரித்து விடுங்கள் எனக் கூறினார்கள். ஆனால், இப்போது ஆசிரியர்களையே மாணவர்கள் அடிக்கின்றனர்.

ஓய்வூதியத் திட்டம்: எதை சொன்னாலும் நலினமாகவும், நாகரிகமாகவும் சொல்ல வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறுவார். மீண்டும் 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும்' என்ற தீர்மானம் இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார்’ என நம்பிக்கை உள்ளதாகக் கூறினார்.

நான் ஒரு போராட்டக்காரன்: 'போராட்டம் என ஒன்று அறிவித்தால் முதல் ஆளாக அங்கு நிற்பேன்; ஏனென்றால், நான் ஒரு போராட்டக்காரன்' என ராமதாஸ் கூறினார். இதில் பாமக தலைவர் கோ.க.மணி மற்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பேசிய அன்புமணி ராமதாஸ், 'அரசுப்பணியாளர்கள் நியாயமாக நேர்மையாக பணியாற்ற வேண்டும். அடிப்படை வசதிகளுக்காக அரசு அலுவலர்களை மக்கள் நாடி வரும்போது அதை அவர்கள் உதாசீனம்படுத்தும்நிலை உள்ளது.

தனியார் மயமாக்கல் வேண்டாம்: தற்போது அரசுப்பணியில் நேர்மையாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சர் தன்னிடம் இருந்த செயலாளர் அதிகமாக (30 %) கமிஷன் கேட்டு தொந்தரவு செய்வதாக மற்றொருவரிடம் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கப்போவதாகத் தகவல் வருகிறது. அதை நாங்கள் விட மாட்டோம்.

ராமதாஸ் கலந்து கொண்ட ஆசிரியர் பாதுகாப்பு கூட்டம்
ராமதாஸ் கலந்து கொண்ட ஆசிரியர் பாதுகாப்பு கூட்டம்

இலங்கை நிலை தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது: தனக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால், இந்த பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க முடியும். தமிழ்நாடு 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இலங்கை இருக்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்து விடக்கூடாது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில், அறிக்கை போராட்டம் அறிவித்தால் அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறிவிடும். மோடியாக இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தாலும், ராமதாஸ் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்’ என ஏற்றுக்கொள்வதாக அன்புமணி கூறினார்.

இந்தி திணிப்பு: ’எது தேவையோ, அதில் தான் அரசுப்பணத்தை செலவு செய்ய வேண்டும். பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த அரசுப்பணத்தை செலவழிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள தாய்மொழிக் கல்வி உள்ளிட்ட சில அம்சங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளன. ஆனால், அதில் உள்ள இந்தி திணிப்பு, மும்மொழிக்கொள்கைகள் தேவையற்றவை; இந்தியாவிற்கு தேசியமொழி என எதுவுமில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும்போது நான் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி படிக்க கட்டாயப்படுத்தக்கூடாது’ என அன்புமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: உ.பி-யில் பாஜக மூன்றாவது மொழியாக தமிழை ஏற்குமா? - அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.