ETV Bharat / state

உ.பி-யில் பாஜக மூன்றாவது மொழியாக தமிழை ஏற்குமா? - அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி

author img

By

Published : Apr 15, 2022, 7:20 PM IST

அனைத்து மாநிலங்களிலும் இரு மொழிக் கொள்கை மட்டுமே சாத்தியம் எனக்கூறும் பாஜக, உத்தரப்பிரதேசத்தில் இந்தி, ஆங்கிலத்தைத் தவிர மூன்றாவது மொழியாகத் தமிழை கொண்டு வர முடியுமா? என காஞ்சிபுரத்தில் பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி
அன்புமணி

காஞ்சிபுரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் 'பாமக 2.0' என்னும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்புகள் மாற்றும் பணி இன்று (ஏப்.15) நடைபெற்றது.

அதன்நீட்சியாக பாமக காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், 'பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள்; யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் வகிக்கும் கட்சிப்பொறுப்பில் இருந்தோ... அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்தோ நீக்கப்படுவார்கள். 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

உ.பி-யில் பாஜக மூன்றாவது மொழியாக தமிழை ஏற்குமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

பூரண மது விலக்கு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நிறைவேற்றுவார். இல்லையென்றால், பாட்டாளி மக்கள் கட்சியினர் பற்றி தெரியும்? பாமக-வினரிடம் சொல்லியிருக்கிறேன். நிச்சயமாக சட்டம் நிறைவேறும். மதுவை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை; அண்ணா பெயர் வைத்து கட்சி நடத்தும் கட்சிகள் மதுவை விற்பனை செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு என்பது நமது நோக்கம், பேரறிஞர் அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம்' என்று பேசியுள்ளார்.

தமிழை உ.பி-யில் ஏற்பீர்களா? : நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உச்ச நீதிமன்றம் மூலம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசும் பாட்டாளி மக்கள் கட்சிக்குச் சாதகமான முடிவு எடுக்கும். தமிழ்நாட்டில் மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டனத்திற்க்குரியது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா..? நாட்டில் இரு மொழிக்கொள்கை மட்டுமே சாத்தியமாகும். மூன்றாவது மொழி சாத்தியமில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய தொடர் வண்டித்துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சக்தி கமலாம்பாள், மாவட்டச் செயலாளர் மகேஷ் குமார் உள்ளிட 500-க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அன்புமணி மகள் திருமணம் - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.