ETV Bharat / city

Heavy Rain Alert: 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Nov 21, 2021, 1:08 PM IST

Heavy Rain Alert, Chennai Regional Meteorological centre
Heavy Rain Alert

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric overlay circulation) தமிழ்நாடு கடலோரப் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது (Heavy Rain Alert) என வானிலை ஆய்வு மையம் (Chennai RMC) தெரிவித்துள்ளது.

சென்னை: வானிலை ஆய்வு மையம் (Chennai Regional Meteorological centre) இன்று (நவ.21) செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கி.மீ உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric overlay circulation) தமிழ்நாடு கடலோரப் பகுதி வரை நீடிக்கிறது.

இதன் காரணமாக இன்று (நவ.21) திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை (Heavy Rain Alert in 8 districts) பெய்யக்கூடும்.

நவ. 22 நிலவரம்

ஏனைய வடமாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (நவ.22) கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 10 செ.மீ மழையும், நந்தியார் தலை (திருச்சி), அவலூர்பேட்டை (விழுப்புரம்) ஆகிய பகுதிகளில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Chennai Flood: சென்னையில் தீவாகக் காட்சியளிக்கும் கிராமம்; காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.