ETV Bharat / city

'நாடு திரும்பிய உக்ரைன் மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Mar 3, 2022, 4:24 PM IST

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

உக்ரைன் மாணவர்களை முழுமையாக மீட்டு வந்த பிறகு அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப அவர்களின் படிப்பு முறைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 'உலக செவித்திறன் நாள்' குறித்த கருத்தரங்கு கூட்டம் இன்று (மார்ச்.3) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், " முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் சாலை விபத்து மரணம் 1743 ஆக இருந்தது. இன்னுயிர் காப்போம் திட்டம் கொண்டுவந்ததன் காரணமாக இந்த ஆண்டு (2022) ஜனவரியில் சாலை விபத்து மரணம் 540ஆகக் குறைந்துள்ளது. மூன்றில் ஒரு பங்காக மரணம் குறைந்துள்ளது.

கரோனா பாதிப்பை ஜீரோவாக்குவோம்

தமிழ்நாட்டில் 87% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 92% பேர் முதல் தவணையும், 72 % பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தியோரில் 2-3 % மட்டுமே கரோனாவால் மரணமடைந்தனர். நேற்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை 320 என்றளவில் பதிவாகியுள்ளது. இதை ஜீரோவாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

உலக செவித்திறன் நாளையொட்டி, குறைபாடுடையவர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.
உலக செவித்திறன் நாளையொட்டி, குறைபாடுடையவர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.

தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 வாரமாக நடைபெறாமல் இருந்த கரோனா தடுப்பூசி முகாம் இந்த வாரம் (மார்ச் 5) சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில், 23ஆவது கரோனா தடுப்பூசி முகாமாக நடைபெறுகிறது.

உக்ரைன் மாணவர்களுக்கு உதவி

பிலிப்பைன்ஸ் , தாய்லாந்து உள்பட முகவர்கள் மூலமாக வெளிநாடு சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறித்த விவரங்களைத் தயார் செய்து வருகிறோம். மற்ற படிப்புகள் போல் இல்லாமல், ஆன்லைன் வழியில் படிப்பதை மருத்துவப் படிப்பில் ஏற்க மாட்டார்கள் என்பது போன்ற சூழல் இருக்கிறது. எனவே, உக்ரைன் மாணவர்களை முழுமையாக மீட்டு வந்த பிறகு அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப அவர்களின் படிப்பு முறைகள் குறித்து நடவடிக்கைகள் எடுப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: CRDA சட்டப்படி செயல்படுங்கள், தலைநகர் விவகாரம் ஆந்திரா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.