ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஒரே நாளில் பத்தாயிரத்தை கடந்த கரோனா: 74 பேருக்கு ஒமைக்ரான்

author img

By

Published : Jan 8, 2022, 10:32 PM IST

Covid Count in Tamil Nadu
Covid Count in Tamil Nadu

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 978 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற 18ஆவது மெகா தடுப்பூசி முகாம் குறித்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மா. சுப்பிரமணியன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"இன்று நடைபெற்ற 18ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 34 ஆயிரத்து 83 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதில் முதல் தவணையாக 57 லட்சத்து ஆயிரத்து 795 பேருக்கும், இரண்டாம் தவணையாக 11 லட்சத்து 62 ஆயிரத்து 288 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாளை தடுப்பூசி முகாம்கள் செயல்படாது

இதுவரை தமிழ்நாட்டில் 87.3 விழுக்காட்டினருக்கு முதல் தவணையும் 60.1 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், அரியலூர், திருப்பூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் 90 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 9) முழு ஊரடங்கு என்பதால் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது. வரும் ஜனவரி 10ஆம் தேதிமுதல் செயல்படும். வருகின்ற 10ஆம் தேதிமுதல், வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரக்கூடிய நபர்கள் தங்களை ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது.

பத்திரிகைத் துறையினருக்கு வருமானத்தில் விலக்கு

அதன்படி, 10ஆம் தேதி இரவு 1 மணி முதல் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோர் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தித் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை நடைமுறைக்கு வருகிறது.

10ஆம் தேதிமுதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்கு முதற்கட்டமாக இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திகொண்ட ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த நான்கு லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஆயிரத்து 440 பேருக்கு வருமானத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதற்கட்டமாக, 10ஆம் தேதி பத்திரிகைத் துறையைச் சார்ந்த 15 பேருக்கு முதலமைச்சர் காப்பீடு அடையாள அட்டையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

தமிழ்நாட்டில் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 64 பேர் ஒமைக்ரான் தொற்றும் மீதமுள்ள 10 பேருக்கு டெல்டா வகை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், கரோனா தொற்று இன்று (ஜனவரி 8) ஒரு நாளில் 10 ஆயிரத்து 978 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

டாஸ்மாக் மூடப்படுமா?

சென்னையில் புறநகர் ரயில்களில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்த ஆர்வமில்லாதவர்கள், இணை நோய் உள்ளவர்கள் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறித்து கேள்விக்கு, "நீங்க உயிரோடு இருங்கள் என்று சொல்வது கட்டாயப்படுத்துவதா?" என்று காட்டமாகப் பதிலளித்தார்.

மேலும், பேசிய அவர், "டாஸ்மாக், பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்கு 10ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறார்களில் இதுவரை 22 லட்சத்து 50 ஆயிரத்து 241 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாள்களில் 67.25 விழுக்காடு சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவரைத் தொடர்ந்து பேசிய துறையின் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், "தொடர்ச்சியாக கடைகள், வணிக அங்காடிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுகிறார்கள் என்பது தொடர்பாக புகார்கள் வருமானால் வரும் வாரங்களில் கடைகள் அனைத்து மூடப்படும்" என வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

இதையும் படிங்க: சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.